வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டை இணைக்க ஏதுவாக தஞ்சை மாவட்டத்தில் சிறப்பு முகாம் நடக்கிறது.
தஞ்சை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வாக்கு சாவடி நிலைய அலுவலர்கள், வட்டாட்சியர் அலுவலகங்களில் படிவம் 6 பி இல் வாக்காளர்களின் ஆதார் எண், மொபைல் நம்பர் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண் போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்படுகிறது.
இதுவரை 20 லட்சத்து 37 ஆயிரத்து 651 வாக்காளர்களில், 13 லட்சத்து 5 ஆயிரத்து 947 வாக்காளர்கள் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துள்ளனர். பொதுமக்கள் வசதிக்காக தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள 2,035 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம்கள் வரும் 19ஆம் தேதி மற்றும் மார்ச் 5ஆம் தேதி ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.