Google map -ஐ இன்டர்நெட் வசதி இல்லாமலும் நம்மால் எப்படி அதனை பயன்படுத்தி கொள்ள முடியும்.
கூகுள் மேப் என்பது தற்போதைய காலகட்டத்தில் வழி கேட்கும் பெட்டிக்கடை போல நம்மில் கலந்துவிட்டது. முன்பெல்லாம் வழி தெரியா இடங்களுக்கு சென்றால், அல்லது செல்வதற்கு ஆயத்தமானல் அங்குள்ள பெட்டிக்கடை, அப்பகுதி மக்கள் என வழி கேட்டு செல்வோம்.
நாம் செல்லும் நேரத்தில் அப்படி யாரும் இல்லை என்றால் சிக்கல் தான். ஆட்கள் அல்லது வாகனம் ஏதேனும் வருகிறதா என பார்த்து செல்ல வேண்டிய சூழல் நிலவியது. ஆனால், தற்போது கூகுள் மேப்பால் அந்த நிலை முற்றிலும் மாறிவிட்டது என்றே கூறலாம். அந்தளவுக்கு கூகுள் மேப் ஓட்டுனர்களுக்கு பெரிய பேருதவியாக இருந்து வருகிறது.
ஆனால், அதற்கு நம்மிடம் ஸ்மார்ட் போன் இருக்க வேண்டும். அதில் இன்டர்நெட் கனெக்ஸன் இருக்க வேண்டும். இவை இருந்தால் மட்டுமே இது சாத்தியமாக இருந்தது. ஆனால், இந்த கூகுள் மேப்பை இன்டர்நெட் இல்லாமலும் பயன்படுத்தலாம். அது நம்மில் பலருக்கு தெரியாமல் இருந்து வந்தது. தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக தெரியவந்துள்ளது.
அதாவது முதலில் கூகுள் மேப் நமது ஸ்மார்ட் போனில் இருக்க வேண்டும். அதில் நமது புகைப்படம் இருக்கும் வலதுபக்க மேற்பகுதியை க்ளிக் செய்ய வேண்டும். அதில் ஒரு பக்கம் ஓபன் ஆகும். அதில், ஆஃப் லைன் மேப்-ஐ க்ளிக் செய்ய வேண்டும். அதில் செலக்ட் யுவர் ஓன் மேப் எனும் பகுதியை க்ளிக் செய்ய வேண்டும். அதில் காட்டப்படும் நீல நிற கட்டத்திற்குள் எந்த பகுதியின் மேப் வேண்டுமோ அதனை இன்டர்நெட் இருக்கும் போதே தேர்வு செய்து சேமித்து வைத்து கொள்ள வேண்டும். அதனை இன்டர்நெட் இல்லாத சூழலில் நாம் பயன்படுத்திக்கொள்ளலாம்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.