செந்தலைப்பட்டினம் மேலத்தெருவில்  வடிகால் அமைக்கும் பணி தொடக்கம்!

தஞ்சை மாவட்டம் பேராவூரணி வட்டம் செந்தலைப்படினம் மேலத்தெருவில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி நேற்று தொடங்கப்பட்டுள்ளது.

மேலத்தெருவில் பல வருங்களாக மழைக்காலம் வந்தால் இந்த பகுதி குளம் போல கானப்படும் இங்கு வடிகால் அமைப்பது பொது மக்களின் பல வருட கோரிக்கையாக இருந்தது. இந்த கோரிக்கையை பூர்த்தி செய்யும் விதமாக ஒன்றிய கவுன்சிலர் (ஏற்பாடு) நிதியிலிந்து சுமார் ரூ 18 லட்சம் மதிப்பில் மேலத்தெரு அப்துல் அஜிஸ் வீட்டிலிந்து பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள குளம் வரை வடிகால் அமைக்கும் பணி ஒன்றிய கவுன்சிலர் செய்யதுமுகமது மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் ரகுமத்துல்லா இவர்களின் மேற்பார்வையில் இந்த வடிகால் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. 

மேலும் வடிகால் அமைக்கும் பணி முடிந்த பிறகு மேலத்தெருவில் மதரஷா முதல் கிழவிக் கடை வரை ஒன்றிய கவுன்சிலர் நிதியிலிருந்து ரூ 6.75 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கப்பட இருப்பதாக ஒன்றிய கவுன்சிலர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

புகைப்படங்கள். செந்தலை சேக்....


-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







கருத்துரையிடுக

0 கருத்துகள்