இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் கிராமங்களையும் ஒன்றிணைத்து அரசின் சேவைகளை இணையதளம் மூலம் மக்களுக்கு வழங்க 'பாரத் நெட்' திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் ரூ. 1230 கோடி மதிப்பில் 12,525 கிராமங்களிலும் இணையவசதி ஏற்படுத்த தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த திட்டத்தில் கண்ணாடி இழை கேபிள்கள் மொத்தமாக 15 சதவீதம் நிலத்திற்கு அடியிலும் 85% வான் வழியிலும் மொத்தமாக 49 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தொலைவில் அமைக்கப்பட உள்ளது.
இந்தத் திட்டம் செயல்படுத்த ஆலோசகர்களை தேர்ந்தெடுக்கும் பணியை அரசு தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் அனைத்து இணைய சேவைகள் கேபிள் டிவி சேவைகள், மின் ஆளுமை சேவைகள், தங்கள் கிராமத்திலேயே பெற்றுக்கொள்ளலாம். இந்த நிலையில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு தேவையான ஆலோசனைகளை வழங்க தேர்ந்தெடுக்க டெண்டர் அறிவிப்பை நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்துவதற்காக அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர் தலைமையில் குழு அமைக்க ஏற்கனவே உத்தரவிட்டுள்ள நிலையில் தற்போது இந்த திட்டத்தை செயல்படுத்த ஆலோசகர்களை நியமிக்க டெண்டர் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பாரத் நெட் பேஸ் 2-வின் கீழ் தமிழகத்தின் 12,524 கிராமங்கள் இணைய வசதியைப் பெறவிருக்கின்றன. இதற்கான மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்குமான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 26-ல் கையெழுத்தானது. தமிழகத்தின் கடலோர கிராமங்கள் தவிர மற்ற கிராமங்களில் மின்சார வாரியத்தின் 11/33 KV கேபிள் மூலமும் கடலோர கிராமங்களில் இதற்காக பூமிக்கு அடியில் புதிதாக ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் மூலமும் இணைய வசதி அளிக்கப்பட இருக்கிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் இருக்கும் 6,25,000 கிராமங்களில் தலா 2 – 5 வைஃபை ஹாட்ஸ்பாட்டுகள் உருவாக்கப்பட திட்டமிடப்பட்டிருக்கிறது. மொத்தம், 7,00,000 வைஃபை ஹாட் ஸ்பாட்டுகள் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்தபட்சம் 2,50,000 கிராமங்களில் 100 Mbbs வேகம் கொண்ட இணைய இணைப்பு கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தின் முதல் பேஸில் 13 மாநிலங்களைச் சேர்ந்த 10,000 கிராமங்களில் இணைய வசதி கொடுக்கும் பணிகள் கடந்த 2017 டிசம்பரில் நிறைவு பெற்றது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.