தஞ்சை மாவட்டத்தில் சேமிப்பு கிடங்குகளிருந்து பொங்கல் பரிசு - ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி தொடக்கம்.

தஞ்சை மாவட்டத்தில் சேமிப்பு கிடங்குகளில் இருந்து பொங்கல் பரிசு பொருட்களை ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி தொடங்கியது.

தமிழகத்தில், தமிழர் திருநாளான தைப் பொங்கல் பண்டிகையை பொது மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடும் நோக்கில், 21 பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக வழங்கப்படும் என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, சுமார் 2.15 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிப்போர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

இதற்காக சென்னையில் இருந்து பொங்கல் பரிசுப் பொருட்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதன்படி தஞ்சை மாவட்டத்திற்கு பொங்கல் பரிசுப் பொருட்கள் லாரிகளில் கொண்டு வரப்பட்டு சேமிப்பு கிடங்குகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்திற்கு சொந்தமான சேமிப்பு கிடங்கு மற்றும் பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு, திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், ஆடுதுறை, மனையேறிப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள சேமிப்பு கிடங்குகளிலும் பொங்கல் பரிசு பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.

தற்போது அந்த பரிசு பொருட்கள் ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இன்னும் ஓரிரு நாளில் மக்களுக்கு டோக்கன் வினியோகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. டோக்கனில் குறிப்பிடப்படும் தேதியில் வந்து ரேஷன் பொருட்களை வாங்கி செல்லலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதில், தெருவாரியாக சுழற்சி முறையில் நாளொன்றுக்கு 150 முதல் 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு வினியோகம் செய்ய வேண்டும் என்றும், பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வினியோகம் செய்ய வேண்டிய முழு பொறுப்பும் ஆட்சியரையே சாரும் என்றும் தமிழக அரசு கூறியது குறிப்பிடத்தக்து.


-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







கருத்துரையிடுக

0 கருத்துகள்