மல்லிப்பட்டினத்தில் கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அடுத்த சேதுபாவாசத்திரம் ஒன்றியம் சரபேந்திரராஜன்ப்பட்டினம் ஊராட்சி மல்லிப்பட்டினம், சின்னமலை, ராமர் கோவில் மற்றும் கடற்கரையில் வசிக்கும் மீனவ மக்களுக்கு கடற்கரை சுற்றியுள்ள மற்ற பகுதிகளுக்கும் கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது
நிகழ்ச்சியில் கொரோனா பரவல் மீண்டும் உலக நாடுகளில் அதிகரிக்க தொடங்கி இருப்பதால் குறித்தும் அரசு அறிவுறுத்தும் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கொரோன தடுப்பூசியின் அவசியம் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது இதில் வட்டார மருத்துவ அலுவலர் ராமலிங்கம் மருத்துவ அலுவலர் சேது கிராம சுகாதார செவிலியர் மாலதி மற்றும் பலர் கலந்து கொண்டனர். 
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

கருத்துரையிடுக

0 கருத்துகள்