பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி ஆர்ஜென்டீனா அணி சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தது.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகா்களை கட்டி வைத்திருந்த பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாா் தலைநகா் தோஹாவில் கடந்த நவ. 20-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. மொத்தம் 36 நாடுகள் பங்கேற்ற இதில் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணியும் முன்னாள் சாம்பியனுமான ஆர்ஜென்டீனாவும் மோதின. இரு அணிகளும் சமபலத்துடன் இருந்ததால் சாம்பியன் பட்டத்தை வெல்லப் போவது யாா் என உலகமே ஆவலுடன் எதிா்நோக்கி காத்திருந்தது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி ஆர்ஜென்டீனா அணி வெற்றி வாகை சூடியது. இறுதி ஆட்டம் தொடங்கியதும் இரு அணிகளும் கோல் அடிக்க கடுமையாக போராடி வந்தநிலையில் 21ஆவது நிமிடத்தில் ஆர்ஜென்டீனா அணிக்கு பெனால்ட்டி வாய்ப்பு கிடைத்தது. இதனை மிகச்சரியாகப் பயன்படுத்திக் கொண்ட ஆர்ஜென்டீனாவின் மெஸ்ஸி கோல் அடித்து பிரான்ஸ் அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
இறுதிப்போட்டியில் மெஸ்ஸி கோல் அடித்ததன் மூலம் உலகக் கோப்பை போட்டிகளில் பிரேசில் நாட்டின் கால்பந்தாட்ட மன்னன் பீலேயின் 12 கோல் சாதனையை சமன் செய்தார். அதனைத் தொடர்ந்து விறுவிறுப்பாக சென்ற ஆட்டத்தில் ஆர்ஜென்டீனா அணியின் டி மரியா மீண்டும் ஒரு கோல் அடிக்க பிரான்ஸ் அதிர்ச்சியடைந்தது. 2க்கு 0 என முதல் நேர ஆட்டம் முடிந்த நிலையில் இரண்டாம் நேர ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்க கடுமையாகப் போராடின.
79ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைக்க அதனை கோலாக மாற்றி அசத்தினார் பிரான்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் எம்பாப்வே. இதை எதிர்பாராத ஆர்ஜென்டீனா அணிக்கு அடுத்த நிமிடத்திலேயே மீண்டும் கோல் அடுத்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் எம்பாப்வே. மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய இந்த ஆட்டத்தில் 80ஆவது நிமிட முடிவில் இரு அணிகளும் தலா 2 கோல்களில் இருக்க ஆட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியது. இரு அணிகளும் சம கோல் அடித்திருந்ததைத் தொடர்ந்து ஆட்டம் ‘டை’ ஆனது.
இரு அணிகளும் சம கோல் அடித்திருந்ததைத் தொடர்ந்து ஆட்டம் டை ஆனது. இதனால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதில் முதல் 15 நிமிடத்தில் யாரும் கோல் அடிக்கவில்லை. பரபரப்பான 108ஆவது நிமிடத்தில் ஆர்ஜென்டீனாவின் மெஸ்ஸி கோல் அடிக்க ஆட்டம் திசைமாறியது 116ஆவது நிமிடத்தில் பிரான்ஸுக்கு பெனால்ட்டி சாட் கிடைக்க 3ஆவது கோலை அடித்து ஆர்ஜென்டீனாவை தவிக்க விட்டார் எம்பாப்வே. இரு அணிகளும் 3க்கு 3 என மோத இறுதிகட்டத்தை எட்டிய ஆட்டம் 120 நிமிடங்களைக் கடந்தது.
அதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் தலா 5 வாய்ப்புகள் வழங்கப்பட்டன. இதில் பிரான்ஸ் அணி 2 கோல்களும், ஆர்ஜென்டீனா அணி 4 கோல்களும் அடித்தன. இறுதியில் 7க்கு 4 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி ஆர்ஜென்டீனா அணி வெற்றி வாகை சூடியது. ஆர்ஜென்டீனா வென்றதன் மூலம் 3ஆவது முறையாகக் கோப்பையை வென்ற பெருமையை அந்த அணி பெற்றுள்ளது. ஆர்ஜென்டினாவின் வெற்றியை உலகம் முழுவதும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.?
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.