பட்டுக்கோட்டையில் அரசு பேருந்து - தனியார் பேருந்து டிரைவர்களுக்கு இடையே தகராறு

பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் யார் முதலில் செல்வது என தனியார் மற்றும் அரசு பேருந்துகளுக்கும் இடையே போட்டி நிலவுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில், பட்டுக்கோட்டை-தஞ்சாவூர் வழித்தடத்தில் பகல் நேரத்தில் 3 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து புறப்பட்டு செல்லும் வகையில் நேரம் ஒதுக்கீடு செய்து பேருந்துகள் இயக்கபட்டு வருகிறது.

பட்டுக்கோட்டை-– தஞ்சாவூர் வழித்தடத்தில் செல்லும் சில தனியார் பேருந்துகள், அரசு பேருந்துகளை முந்தி செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் அதிக வேகத்தில் செல்வதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து தஞ்சாவூருக்கு செல்வதற்கு அரசு பேருந்து ஒன்று தயாராக இருந்த நேரத்தில், அதற்கு அடுத்த–தகாக தஞ்சாவூருக்கு செல்ல இருந்த தனியார் பேருந்து ஒன்றில் பயணிகளை ஏற்றியுள்ளனர்.

இது தொடர்பாக அரசு பேருந்து ஓட்டுநருக்கும், தனியார் பேருந்து ஓட்டுநருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. உடனே அருகில் இருந்த சக ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் சமதானம் செய்து வைத்தனர். இதனால் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர். இதுகுறித்து பயணிகள் கூறுகையில், தனியார் பேருந்தில் ஏறினால் விரைவாக சென்றுவிடலாம் என கருதி பயணிகள் ஏறுகின்றனர்.

ஆனால் சில தனியார் பேருந்துகள் தங்கள் பேருந்தில் அதிக அளவு பயணிகளை ஏற்ற வேண்டும் என்ற லாப நோக்கத்தில் செயல்பட்டு அரசு பேருந்துக்கு பிறகு புறப்பட்டு அரசு பேருந்தை முந்தி சென்று அதிக அளவில் பயணிகளை ஏற்றுகின்றனர். இது தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலரும், மாவட்ட கலெக்டரும் உரிய நடவடி க்கை எடுக்க வேண்டும் என்றனர்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

கருத்துரையிடுக

0 கருத்துகள்