மனோராவில் அலையாத்திக்காடு அமைக்கும் பணியை தொடங்கி வைத்த ஆட்சியர்

தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சி, மனோராவில் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கடலோர கிராமங்களை இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாக்கும்  வகையில் ஆழிவனம் எனப்படும், அலையாத்திக் காடுகள் ஏற்படுத்தும் வகையில் சுமார் 2, 000 சுரபுன்னை செடிகளை நட்டு வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.  

இப்பகுதியில், வனத்துறை, ஓம்கார் பவுண்டேஷன், மாவட்ட பசுமைக்குழு, கவின்மிகு தஞ்சை இயக்கம் சார்பில், செஞ்சிலுவைச் சங்கம், நாட்டு நலப்பணித் திட்டம், ரோட்டரி சங்கம், அரிமா சங்கம், இளைஞர் அமைப்புகள் இணைந்து, சுமார் 25 ஆயிரம் சுரபுன்னை செடிகள் நடப்பட உள்ளன. இந்த நிகழ்ச்சியில் பேராவூரணி எம்எல்ஏ அசோக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

கருத்துரையிடுக

0 கருத்துகள்