சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா பெரும் தொற்று சில நாட்களாக வேகமாக பரவிவருகிறது. இதனை எதிர்கொள்ள இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில நாட்டில் நிலவக்கூடிய கொரோனா சூழல் குறித்து மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்ட்வியா நாடாளுமன்றத்தில் தாமாகவே முன்வந்து அறிக்கை அளித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, உலகின் பல்வேறு நாடுகளில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருகிறது. ஆனால் இந்தியாவை பொறுத்தவரை கடந்த ஒரு ஆண்டாக நோய் தொற்று குறைந்து வருகிறது. இந்தியாவில் ஒரு நாளைக்கு 153 புதிய நோய் தொற்று பதிவாகி வரக்கூடிய சூழ்நிலையில் உலக அளவில் இந்த நோய் தொற்று எண்ணிக்கை 5.87 லட்சமாக இருக்கிறது. அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் அதிக அளவில் நோய் தெற்றும், உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. ஆனால் இந்தியாவில் மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலம் கொரோனா பெரும் தொற்று சிறப்பாக சம்மாளிக்க முடிந்தது. 220 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தற்போது உலக அளவில் ஏற்பட்டுள்ள பெரும் தொற்றின் சூழலை மத்திய சுகாதார அமைச்சகம் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. மேலும், கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகளை தீவிரப்படுத்துவது, பாசிட்டிவ் என்று வரக்கூடிய மாதிரிகளை மரபணு பகுப்பாய்வுக்கு அனுப்புவது உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் மாநில அரசுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் நாட்களில் பண்டிகைகள் வர இருப்பதால் பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை மாநில அரசு கட்டாயமாக்க வேண்டும். சர்வதேச சுற்றுலா பயணிகளை பொறுத்தவரை, இங்கு வருகை தரக்கூடிய அனைத்து பயணிகளையும் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று முதல் துவங்கி உள்ளது என்று கூறினார்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.