சீனாவில் தற்போது பிஎப் 7 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் இந்தியாவில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. கொரோனாவில் இருந்து மக்களைக் காக்க மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை முக்கியமான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
அதன்படி விமான நிலையங்களில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொரோனா பரிசோதனை இன்று முதல் அமல்படுத்தப்படும். அதன் பிறகு விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் 2 தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். இல்லையெனில் சமீபத்தில் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழை வைத்திருக்க வேண்டும். அத்துடன் முககவசம் அணிந்தவர்கள் மட்டுமே விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை, தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட விமான நிலையங்களில் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள மருத்துவக்குழுவை நியமிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பயணிகளுக்கு கொரோனா பாஸிட்டிவ் என்று வந்தால் அவர்கள் விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். அத்துடன் கொரோனா பாதிக்கப்பட்ட பயணியின் முகவரிக்குட்பட்ட மாவட்டத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அனைத்து பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.