உலகளவில் அதிகம் உபயோகிக்கப்படும் இணையதளங்களில் கூகுளுக்கு அடுத்த இடத்தை யூடியூப் பிடித்திருக்கிறது. வாசிப்புக்கு அப்பால் காட்சி வாயிலாக ஒன்றை உணரச் செய்வதிலும், வாசிப்பு வாசனையே அறியாதவருக்கும் அறிவூட்டுவதிலும் யூடியூப் வீடியோக்கள் புரட்சி செய்து வருகின்றன.
பயனர்களுக்கு அப்பால், படைப்பாளிகளான யூடியூப்பர்களுக்கும் வருமானத்தை வாரி வழங்கி வருவதிலும் யூடியூப் கவனம் பெற்றிருக்கிறது, அவற்றை மென்மேலும் மெருகேற்றும் வகையில் புதிய வசதிகளை கூகுள் நிர்வாகம் அறிமுகம் செய்து வருகிறது. அவற்றில் இந்திய அளவிலான அண்மை மாற்றங்கள் கவனம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக வீடியோக்களின் மொழியை ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாற்றும் வசதியை யூடியூப் இந்தியா அறிமுகம் செய்கிறது. இவை யூடியூபர் - பயனர் என இருதரப்பிலும் வரவேற்பை பெற இருக்கின்றன.
வெள்ளோட்ட அளவிலான இந்த முயற்சி முதல் கட்டமாக மருத்துவம் சார்ந்த வீடியோக்களுக்கு வழங்கப்படுகின்றன. ஆங்கிலம், இந்தி, பஞ்சாபி, மராத்தி ஆகிய மொழிகளுக்கு இடையே பயனர் இனி, தங்கள் விருப்பத்துக்குரிய மொழியை தேர்ந்தெடுத்து வீடியோவை பார்க்கலாம். இதற்காக வெவ்வேறு ஆடியோ பதியும் தடங்களை ஒரே வீடியோவில் உள்ளடக்கும் தொழில்நுட்பத்தை கூகுள் நிறுவனம் புகுத்தியுள்ளது.
இந்த வசதியை தங்கள் வீடியோவில் ஏற்ற விரும்பும் யூட்யூப்பர்கள் ’அலௌட்’(Aloud) என்ற டப்பிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டியிருக்கும். இந்த வசதி முதல்கட்டமாக மருத்துவம் சார்ந்த தொழில்முறை பயன்பாட்டுக்கான வீடியோக்களில் மட்டும் அறிமுகமாகிறது.
அடுத்த கட்டங்களில் தமிழ் உள்ளிட்ட இதர மொழிகள் மற்றும் படைப்புகளில் இந்த வசதி விரிவாக்கம் காண இருக்கிறது. இப்போதைக்கு இந்த வசதி குறிப்பிட்ட வீடியோவில் வெளிப்படையாக காட்சியளிக்காது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.