இந்நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 19) வெளியானது. தேர்வு முடிவுகளை
http://www.tnresults.nic.in மற்றும் http://www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மாணவர்கள் முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், மாணவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கும் தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்போன் எண்ணிற்கும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.
இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.67 % தேர்ச்சி பெற்று, பெரம்பலூர் மாவட்டம் மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளது.
டாப் 5 இடங்களை பிடித்த மாவட்டங்கள்:
*பெரம்பலூர் – 97.67%
*சிவகங்கை – 97.53%
*விருதுநகர் – 96.22%
*கன்னியாகுமரி – 95.99%
*தூத்துக்குடி – 95.58%
10 ஆம் வகுப்பு பாட வாரியான தேர்ச்சி விகிதம்
*தமிழ் – 95.55%
*ஆங்கிலம் – 98.93%
*கணிதம் – 95.54%
*அறிவியல் – 95.75%
*சமூக அறிவியல் – 95.83%
தேர்ச்சி விபரங்கள் :
தேர்ச்சி பெற்றவர்கள்: 8,35,614 (91.39%)
மாணவியர் 4,30,710 (94.66%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மாணவர்கள் 4,04,904 (88.16%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மாணவர்களை விட மாணவியர் 6.50% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.