சேதுபாவாசத்திரம் முதல் ECR சாலையில் இரவு நேரங்களில் சுற்றித் திரியும் மாடுகளால் வாகனங்களில் செல்லும் மக்களுக்கு அதிக விபத்துக்கள் ஏற்படுகின்றது.
செந்தலையில் வீடுகளில் வளர்க்கப்படும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு செந்தலை ஐமாத்தார்கள் மற்றும் ஊராட்சி மன்றம் மற்றும் காவல் ஆய்வாளர் இவர்கள் மூலமாக அறிவிப்பு பதாகை ஊரின் மூன்று இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
பொதுமக்கள் நலன் கருதி அறிவிப்பு
ECR சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் மக்களுக்கு விபத்துக்கள் ஏற்படுவதால் ஐமாத்தார்கள் & ஊராட்சி மன்றம் மற்றும் காவல் ஆய்வாளர் இவர்கள் மூலமாக பொதுநலன் கருதி தங்களது மாடுகளை சாலையில் சுற்றித்திரிய விடாமல் வீட்டிலயே பராமரிப்பு செய்வதோடு முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.
காவல் ஆய்வாளர் ஜமாத்தார்கள்.
இவ்வாறு அதில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் ஏதாவது மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதை விரைவில் காணலாம்...
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.