கீழத்தோட்டத்தில் மீனவர்கள் வலையில் சிக்கிய சுமார் 800 கிலோ எடை கொண்ட அரிய வகை கடல் பசு மீண்டும் உயிருடன் கடலுக்குள் விடப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே கீழத் தோட்டம் பகுதியைச் சேர்ந்த 20 மீனவர்கள் ஞாயிறன்று அதிகாலை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது மீனவர் செல்லத்துரைக்கு சொந்தமான வலையை கடலில் விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, சுமார் 800 கிலோ எடை கொண்ட 8 அடி நீளமும், 5 அடி அகலமும் கொண்ட அரிய வகை கடல் பசு ஒன்று சிக்கியது. உடனே அந்த கடல் பசுவை கண்ட மீனவர்கள், இதுகுறித்து பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் சந்திரசேகருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த வனச்சரக அலுவலர் சந்திரசேகர், வனவர் சிவசங்கர் மற்றும் வனத்துறையினர் கீழத்தோட்டத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் மாவட்ட வன அலுவலர் அகில்தம்பி உத்தரவின் பேரில், மீன வர்களுக்கு ஆலோசனையும், அறிவுரையும் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மீனவர்கள் வனத்துறையினரின் அறிவுறுத்தலின்பேரில் மீண்டும் நல்ல நிலையில் கடலுக்குள் கடல் பசுவை விட்டனர்.
கடல்பசுவை மீட்டு உயிருடன் விட்ட மீனவர்களுக்கு பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் சந்திரசேகரன், சந்தன மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும், வனத்துறையினர் சார்பில் விரைவில் விழா நடத்தி மீனவர்கள் கவுரவிக்கப்படுவார்கள் எனவும், ரொக்கப்பரிசு வழங்கப்படும் எனவும் வனத்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.