செந்தலை மேலத்தெருவில் 10 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை: அடிக்கல் நாட்டிய MLA நா.அசோக்குமார்

தஞ்சை மாவட்டம் பேராவூரணி தொகுதி சேதுபாவாசத்திரம் தெற்கு ஒன்றியம் செந்தலைவயல் ஊராட்சியில் நீண்டநாள் கோரிக்கையான மேலத்தெருவில் ரூ 10 லட்சம் நிதியில் சிமெண்ட் சாலை அமைக்க அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று மேலத்தெருவில் நடைபெற்றது. 

ஏற்கனவே மேலத் தெருவில் வடிகால் வசதி கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடிக்கல் நாட்டும் நிகழ்வுக்கு பேராவூரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் அடிக்கல் நாட்டினார். நிகழ்வில்  சேதுபாவாசத்திரம் ஒன்றியக் குழு தலைவரும், திமுக வடக்கு ஒன்றிய செயலாளருமான மு.கி.முத்துமாணிக்கம், தெற்கு ஒன்றிய செயலாளர் வை.ரவிச்சந்திரன், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், கவுன்சிலர்கள், செய்யது முகமது, சாகுல், ஊராட்சி மன்ற தலைவர் ரகுமத்துல்லா, து.தலைவர் வாட்சா மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

தகவல் மற்றும் புகைப்படங்கள் : 
F. மீரசா (அட்மின் )


-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

கருத்துரையிடுக

0 கருத்துகள்