சேதுபாவாசத்திரம் ஒன்றியம், சொக்கநாதபுரம் ஊராட்சியில், சொக்கநாதபுரம் ஒத்தக்கடையில், சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில், கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான கூரை வீடு திடீரென தீப்பற்றி எரிந்து முற்றிலும் சாம்பலாகி விட்டது. தகவலறிந்த பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர்
N. அசோக்குமார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு காய்கறி, மளிகை பொருட்கள், அரிசி ஆகிய பொருட்களுடன் ரூபாய் 5, 000ம் நிவாரணம் வழங்கினார்.
அப்போது, சேதுபாவாசத்திரம் ஒன்றியப் பெருந்தலைவர் மு.கி. முத்துமாணிக்கம், ஊராட்சி மன்றத் தலைவர் ராம்பிரசாத், பொதுக்குழு உறுப்பினர்கள் அப்துல் மஜீது, தனபால், ஒன்றியக் குழு உறுப்பினர் ராசேந்திரன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உடன் இருந்தனர்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.