தஞ்சை மாவட்டம் முழுவதும் மின் இணைப்புகளுக்கான பெயர் மாற்ற
சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தஞ்சை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் நளினி வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை மின்பகிர்மான வட்டத்தில் உள்ள அனைத்துப் பிரிவு அலுவலகங்களிலும் இன்று ( திங்கள்கிழமை ) முதல் மின் இணைப்புகளுக்கான சிறப்பு பெயர் மாற்ற முகாம் நடைபெற உள்ளது. மின்நுகர்வோர்கள் தங்களது இணைப்பிற்கான விவரங்களை புதுப்பிக்கும் வகையிலும் மின் இணைப்புகளில் உள்ள பெயரை மாற்றும் விதமாகவும் தஞ்சை மாவட்டம் முழுவதும் சிறப்பு பெயர் மாற்ற முகாம் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
எனவே தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த மின்நுகர்வோர்கள் தங்களுக்குரிய ஆவணங்களுடன் தொடர்புடைய பிரிவு அலுவலகங்களில் உரிய பெயர் மாற்ற கட்டணம் செலுத்தி மின் இணைப்புகளுக்கான பெயர் மாற்ற சேவையை பெற்று கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.