பட்டுக்கோட்டையில் நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்: பட்டுக்கோட்டை, பேராவூரணி வட்டார விவசாயிகள் பயன்பெறலாம்.

பட்டுக்கோட்டையில் விவசாயிகள் குைறதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது. பட்டுக்கோட்டை கோட்டத்துக்கு உட்பட்ட (பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி) விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு நடக்க இருந்தது. இந்தநிலையில் நிர்வாக காரணங்களுக்காக நாளை (வியாழக்கிழமை) காலை 11 மணியளவில் இந்த கூட்டம் மேற்கண்ட இடத்தில் நடக்கிறது. கூட்டத்தில் பட்டுக்கோட்டை கோட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி வட்டத்துக்கு உட்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம். என வருவாய் கோட்டாட்சியர் அக்பர் அலி தெரிவித்துள்ளார்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

கருத்துரையிடுக

0 கருத்துகள்