தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், கடந்த ஏப்ரல் 6ம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடந்த 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வில் சுமார் 9 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள்கலந்து கொண்டு தேர்வை எதிர்கொண்டனர். இத்தேர்வின் முடிவானது கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது. இந்நிலையில் ஏப்ரல் 2023 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் இன்று காலை 10.00 மணி முதல் அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம் செய்யப்படும். தனித்தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்திலேயே பெற்றுக் கொள்ளலாம்.
எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதிய பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்கள் வாயிலாகவும் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அதேபோல, பத்தாம் வகுப்புதுணைத் தேர்வு எழுதியவர்களில் மறுகூட்டல் கோரி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றமுள்ள மாணவர்களின் பதிவெண் பட்டியல் இன்று பிற்பகல் வெளியிடப்படுகிறது. அதன் விவரங்களை மாணவர்கள் தேர்வுத் துறையின் www.dge.tn.gov.in எனும் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.