செந்தலைவயல் ஊராட்சி மன்றத் தலைவர் வெளியிட்டுள்ள நோட்டீஸ் - ல் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
செந்தலைவயல் ஊராட்சியில் நாளை 02.10.2023 திங்கள்கிழமை காலை 10.30 மணியளவில் செந்தலைவயல் சேவை மைய கட்டிட வளாகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் M. ரகுமத்துல்லா அவர்களின் தலைமையில் காந்திஜெயந்தி விழா கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது. அதுசமயம் பொதுமக்களும் சுயஉதவிக்குழுக்களும் தவறாது கலந்துகொள்ள வேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். என ஊர் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கிராம சபை கூட்டம், இந்தியக் குடியரசு நாள் (26, சனவரி), தொழிலாளர் நாள் (1, மே), இந்திய விடுதலை நாள், (15, ஆகஸ்டு) காந்தி ஜெயந்தி (2, அக்டோபர்), உலக நீர் நாள் (மார்ச் 22) மற்றும் உள்ளாட்சி நாள் (நவம்பர் 1) ஆகிய ஆறு சிறப்பு நாட்களின் போது, தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களால் கூட்டப்படுகிறது.
இந்தக் கிராம சபைக் கூட்டத்தில், ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும், பொறுப்புணர்வை ஊக்குவித்தல், வளர்ச்சித் திட்டங்களை திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்தப்படுதல் மற்றும் பயனாளிகளின் விருப்பத்தின்படி பொதுமக்களின் பங்களிப்பை மேம்படுத்துதல் மற்றும் சமூக தணிக்கைக்கு வழி வகுத்தலே கிராம சபைக் கூட்டதின் நோக்கமாகும். கிராம மக்களின் கையிலிருக்கும் அதிகாரம், கிராம சபைக் கூட்ட நடவடிக்கைகள் ஆகும்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.