அம்மணிச்சத்திரம் ECR - சாலையில் கட்டுப்பாட்டை இழந்த மீன்லாரி கவிழ்ந்து விபத்து 3 பேருக்கு பலத்த காயம்
தஞ்சை மாவட்டம் பேராவூரணி வட்டம் அம்மணிச்சத்திரத்தில் கட்டுமாவடியிலிருந்து பட்டுக்கோட்டை நோக்கி இன்று காலை மினி மீன் லாரி 10-க்கும் மேற்பட்டோருடன் மீன்களை ஏற்றி சென்று கொண்டிருந்த போது அம்மணிச்சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகில் வந்த போது வாகனத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்த மீன் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
விபத்துக்கு உள்ளானதில் மீன் லாரியில் பயணித்த 10-க்கும் மேற்பட்டோரில் 3 பேருக்கு பலத்த காயங்களும் எஞ்சியவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக செந்தலைப்பட்டினம் பொதுநல சங்க ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது அதில் பலத்த காயமடைந்தவர்களை உடனடியாக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், மற்றும் எஞ்சியவர்களையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சேதுபாவாசத்திரம் காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
தகவல் மற்றும் புகைப்படங்கள் :
AKN. ராவுத்தர்
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.