ஒருவர் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு வளைகுடாவுக்குத் திரும்பும் போது, உறவுகள் ஊறுகாய், நெய், மற்ற எல்லாவற்றையுமே பேக் செய்வார்கள். அவை வெறும் உணவுப் பொருட்கள் மட்டுமல்ல, குடும்ப உறுப்பினர்களின் அன்பு மற்றும் அக்கறையின் அடையாளமாக அது இருக்கும்.
வளைகுடா நாட்டிற்கு வணிகம், சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்பு நோக்கங்களுக்காக அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் செல்வதால், இந்தியா-UAE விமானப் பாதை மிகவும் பரபரப்பான வழித்தடங்களில் ஒன்றாக உள்ளது. பண்டிகை காலம் நெருங்கி வருவதால், பார்வையாளர்களின் வருகை கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விமான பயணத்தின் போது தேவையில்லாத பொருட்களை எடுத்துச் செல்வது எதிர்பாராத அபாயங்களை உருவாக்கும். ரயில், பேருந்து, கார் போன்றவற்றில் விபத்து ஏற்படுத்தும் பொருட்களை தூக்கி கூட போட்டு விடுவார்கள், ஆனால் விமானத்தில் இது எல்லாம் சாத்தியமா. அதனால் தான் விமானத்தில் எடுத்துச் செல்லும் பொருட்களுக்கு எப்போதுமே கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
மும்பை சர்வதேச விமான நிலையத்தில் தடை செய்யப்பட்ட பொருட்களை உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணிகள் எடுத்துச் செல்வதால்,செக்-இன்(Check-In) பேக்கேஜ் நிராகரிப்பு அதிகரித்துள்ளது. பல பயணிகள் இவை அனைத்தையும் தடைசெய்யப்பட்டவை என்பதை அறியாமல் கொண்டு வருகிறார்கள். இது ஆபத்தை விளைவிக்கிறது. இந்த விஷயங்கள் வெடிப்புகளுக்கு ஆளாகக்கூடியவை என்பதால் எந்த விபத்தையும் தீவிரப்படுத்தலாம். கடந்த ஆண்டு, ஒரு மாதத்தில் மட்டும் 943 உலர் தேங்காய்கள் பயணிகள் சோதனை சாமான்களில் கண்டுபிடிக்கப்பட்டன. காய்ந்த தேங்காயில் அதிக எண்ணெய் இருப்பதால் தீ மூட்டலாம்.
விமானத்தில் நீங்கள் எடுத்து செல்லக்கூடாதவை:
1. காய்ந்த தேங்காய்
2. நெய்
3. ஊறுகாய்
4. பட்டாசுகள்
5. எண்ணெய் உணவு பொருட்கள்
6. பார்ட்டி பாப்பர்ஸ்
7. பெயிண்ட்
8. லைட்டர்ஸ்
9. பவர் பேங்க்குகள்
10. வாசனை திரவியங்கள்
11. இ-சிகரெட்டுகள்
12. கற்பூரம்
UAE க்கு பயணிக்கும் போது இவற்றையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு உங்களது லக்கேஜ்களை பேக் செய்யவும்
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.