இந்தியர்கள் விசா இல்லாமல்  மலேசியாவில் நுழைய முடியும் - புதிய அறிவிப்பு

வரும் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் இந்தியக் குடிமக்கள் விசா இல்லாமலேயே மலேசியாவுக்குச் செல்லலாம். அங்கு 30 நாட்கள் வரை தங்கவும் செய்யலாம்.

இந்தியா மற்றும் சீனாவின் குடிமக்கள் இனி மலேசியாவில் விசா இல்லாமல் ஒரு மாதம் தங்கலாம். டிசம்பர்-1,2023 முதல் திட்டம் நடைமுறையில் வரும் என்று மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராகிம் நேற்று(26/11/23) ஞாயிற்றுக்கிழமை மக்கள் நீதிக் கட்சி மாநாட்டில் பேசியபோது,இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பின்படி, இந்தியா மற்றும் சீனாவில் இருந்து மலேசியாவுக்கு செல்பவர்கள் விசா அனுமதி பெறத் தேவையில்லை. சீனாவும் இந்தியாவும் மலேசியாவின் நான்காவது மற்றும் ஐந்தாவது முக்கியமான வர்த்தக ஆதாரங்கள் ஆகும்.

இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை 15 லட்சம் சீனர்கள் மற்றும் 3,54,486 இந்திய சுற்றுலா பயணிகள் மலேசியாவை பார்வையிட்டுள்ளனர். இதுபோல் இலங்கை மற்றும் தாய்லாந்து நாடுகளும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்தியர்கள் விசாயின்றி தங்கள் நாடுகளை பார்வையிட முடியும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தது குறிப்படத்தக்கது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

கருத்துரையிடுக

0 கருத்துகள்