தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், பொங்கலை கொண்டாடுவதற்கு நேற்று முதல் பொதுமக்கள் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். இந்தநிலையில், இன்று முதல் 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 14-ம் தேதி போகி பண்டிகை, ஜனவரி 15-ம் தேதி பொங்கல் திருநாள், ஜனவரி 16-ம் தேதி மாட்டுப் பொங்கல், ஜனவரி 17-ம் தேதி உழவர் திருநாள் ஆகிய பண்டிகைகள் கொண்டாப்பட உள்ளது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்து வருகின்றனர்.
இன்று ஜனவரி 13-ம் தேதி வங்கிகளுக்கு 2-வது சனிக்கிழமை விடுமுறை, ஜனவரி 14 பொது விடுமுறை, ஜனவரி 15 பொங்கல் விடுமுறை, ஜனவரி 16 செவ்வாய்க்கிழமை மாட்டுப்பொங்கல், ஜனவரி 17 காணும் பொங்கல் என தொடர்ந்து 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன், வாட்ஸ் அப் மற்றும் மொபைல் வங்கி சேவைகள் வழக்கம்போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் இதற்கு ஏற்றார் போல் தங்களின் பணத் தேவைகளை திட்டமிட்டு கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.