திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே அடிப்படை வசதிகளை நிறைவேற்றவில்லை எனக் கூறி, ஒரு கிராமத்தினர் தேர்தலை புறக்கணித்துள்ளனர். திருத்தணி தொகுதிக்கு உட்பட்ட மிட்டகண்டிகை கிராமத்தில், 586 வாக்குகள் உள்ளன. அங்கு காலை முதல் ஒருவர் கூட வாக்குச் செலுத்த வரவில்லை.
கடந்த 20 ஆண்டுகளாக தங்கள் கிராமத்திற்கு குடிநீர், சாலை, பேருந்து உள்ளிட்ட எந்த வசதியும் செய்து தரப்படவில்லை என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக வருவாய்த்துறை உள்ளிட்ட அதிகாரிகளிடம் ஏற்கனவே புகார் அளித்ததாகவும் மிட்டகண்டிகை கிராம மக்கள் கூறுகின்றனர்.
வாக்களிப்பதற்கு யாரும் வரவில்லை என்பதை அறிந்து, திருத்தணி வட்டாட்சியர் ஆசீர்வாதம் அங்கு விரைந்து சென்று கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தால் மட்டுமே, வாக்களிக்கப் போவதாக மிட்டகண்டிகை கிராமத்தினர் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.