செந்தலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புதிய கட்டிடப் பணி துவக்க விழா - MLA அசோக்குமார் பங்கேற்பு

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம் செந்தலைவயல் ஊராட்சியில் சிறப்பு திட்டம் மற்றும் ஒன்றிய பொது நிதி திட்டம் 2022-23 மூலம் செந்தலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிய கட்டிடப் பணி துவக்க விழா பேராவூரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் N.அசோக்குமார் MLA அவர்களின் தலைமையில் இன்று காலை நடைபெற்றது, இதில் சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழுத் தலைவர் மு.கி.முத்துமாணிக்கம் முன்னிலை வகித்தார்,  

இதில் மாவட்ட ஊராட்சிகுழு உறுப்பினர் இலக்கியா நெப்போலியன் மற்றும் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் செய்யது முகமது, ஊராட்சி மன்றத்தலைவர் ரஹ்மத்துல்லா, அரசு அதிகாரிகள், அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளி ஆசிரியர்கள், ஊர் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

புகைப்படங்கள் உதவி : RHM சேட்


-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇


கருத்துரையிடுக

0 கருத்துகள்