அஇஅதிமுக சார்பில் பேராவூரணியில் எம்ஜிஆர் நினைவு நாள்

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் அதிமுக சார்பில், மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்ஜிஆர், 34 ஆவது ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

பேராவூரணி அண்ணா சிலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த, புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் சிலைக்கு, முன்னாள் எம்எல்ஏ.,க்கள் மா.கோவிந்தராசு, மாவட்ட அவைத் தலைவருமான எஸ்.வி.திருஞானசம்பந்தம் ஆகியோர் தலைமையில் ஏராளமான அதிமுகவினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். 

இதில், முன்னாள் மாநில கயறு வாரியத் தலைவர் நீலகண்டன்  அதிமுக ஒன்றியச் செயலாளர்கள், பேராவூரணி தெற்கு கோவி.இளங்கோ, சேதுபாவாசத்திரம் வடக்கு சிவ.மதிவாணன், தெற்கு அருணாசலம், பேராவூரணி ஒன்றியப் பெருந்தலைவர் சசிகலா ரவிசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் ஆர்.பி.ராஜேந்திரன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ராஜா, மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு சத்யராஜா, ஒன்றிய அவைத் தலைவர் சீனிவாசன், ஒன்றிய தகவல் தொழில் நுட்ப பிரிவு சிவா, 
அம்மா பேரவை ஒன்றியச் செயலாளர் ஞானபண்டிதன், ஒன்றியப் பொருளாளர் அசோக்குமார், ஒன்றியத் துணைச் செயலாளர் எல்ஐசி சேகர், நகர துணைச் செயலாளர் பால் ஏ.பக்கர், கிளைச் செயலாளர்கள் எம்.எஸ்.நீலகண்டன், டி.கே.சுப்பிரமணியன், எம்.எஸ்.நீலகண்டன், கோ.ப.ரவி, மற்றும் பின்னவாசல் சரவணன், ரஞ்சித், மாமுண்டி, நகர தொழில்நுட்ப பிரிவு கருணாகரன்,  மற்றும் ஆதனூர் காரல்மார்க்ஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







கருத்துரையிடுக

0 கருத்துகள்