தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடந்த வாக்குப் பதிவின்போது வாக்காளர் உள்பட 5 பேர் இயற்கையாக மரணமடைந்ததாக ஏடிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவின்போது கட்சிகள் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.
மேலும், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் வாக்குப்பதிவு இயந்திரம் உடைக்கப்பட்டதாகவும், மதுரையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாகவும், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி வந்ததாகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.