மின்சாரம் இன்றி வாக்களிக்கும் மக்கள்: பல இடங்களில் பழுதான வாக்கு இயந்திரம் !

நாகையில் மழை பெய்து வருவதால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கைப்பேசி விளக்கில் வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது
ராமநாதபுரத்தில் மழை பெய்து வருவதால் மின் இணைப்பு துண்டிப்பால் மெழுகுவர்த்தி வெளிச்சம் மூலம் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் பகுதியில் மின்சாரம் இல்லாததால் வாக்களிப்பதில் சிரமம் ஏற்பட்டது.
வாக்குப்பதிவு இயந்திரம் பழுதான இடங்கள்:
திண்டுக்கல் வேடசந்தூர் 166வது வாக்குச்சாவடி வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானது.
அரக்கோணம் ஜோதிநகர் 100வது வாக்குச்சாவடியில் வாக்கு இயந்திரம் பழுதானது.
திருப்பூர் அங்கேரிபாளையம் 70வது வாக்குச்சாவடியில் வாக்கு இயந்திரம் பழுதானது,
திருவள்ளூர் பெரியாளையம் கிருஷ்ணாபுரம் கண்டிகையில் வாக்கு இயந்திரம் பழுதானது.
ஈரோட்டில் கொங்கம் பாளையம் 75வது வாக்குச்சாவடியில் வாக்கு இயந்திரம் பழுதானது
நாமக்கல்: சின்னக்கவண்டம் பாளையம் 220வது வாக்குச்சாவடியில் வாக்கு இயந்திரம் பழுது.
ஓசூரில் 246 வாக்குச்சாவடியில் வாக்கு இயந்திரம் பழுது
திருவாரூர் புதூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்கு இயந்திரம் பழுது
ஆம்பூரில் 66வது வாக்குச்சாவடியில் வாக்கு இயந்திரம் பழுது
ராசிபுரம் கூனவேல்பட்டி புதூரில் வாக்கு இயந்திரம் பழுது
விருத்தாச்சலம் ராமச்சந்திரன் பேட்டையில் வாக்கு இயந்திரம் பழுது
கடலூர் கந்தசாமி நாயுடு கல்லூரியில் ஒரு வாக்கு இயந்திரம் பழுது

கருத்துரையிடுக

0 கருத்துகள்