வாக்களிக்க மோட்டார் சைக்கிளில் வந்த முதல்வர் !

மோட்டார் சைக்கிளில் வந்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வாக்களித்தார்.
தமிழகம் மற்றும் கேரளாவுடன் புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது. புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான ரங்கசாமி திலாசுப்பேட்டையில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார். வாக்களிக்க வந்த அவர், மோட்டார் சைக்கிளில் வந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்