சென்னை: திமுக தலைவர் கருணாநிதி திருவாரூர் தொகுதியில் அபார வெற்றி பெற்றுள்ளார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பன்னீர் செல்வத்தை அவர் 67,212 வாக்குகள் வித்தியாசத்தில் கருணாநிதி வீழ்த்தினார். தமிழக சட்டசபைத் தேர்தலில் திருவாரூரில் போட்டியிட்டார் திமுக தலைவர் கருணாநிதி. இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் முடிவில் திருவாரூரில் கருணாநிதி 121196 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இத்தொகுதியில் அவர் இரண்டாவது முறை போட்டியிட்டு வெற்றி கண்டுள்ளார் கருணாநிதி. அதிலும் இம்முறை அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வத்தை அதிக வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார் கருணாநிதி. பன்னீர் செல்வத்தை விட 67212 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார் கருணாநிதி. இதுவரை அவர் பெற்ற மிகப் பெரிய வாக்கு வித்தியாசம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர அகில இந்திய அளவில் சட்டசபைக்கு 13வது முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற பெருமையும் கருணாநிதிக்கு கிடைத்துள்ளது. தொடர்ந்து 13 முறை சட்டசபைத் தேர்தலில் அவர் வெற்றி பெற்றுள்ளார். இதுவரை களமிறங்கிய எந்தத் தேர்தலில் கருணாநிதி தோல்வியைத் தழுவவில்லை.
கடந்த முறை திருவாரூரில் அவர் அவர் பெற்ற வாக்குகளை விட இம்முறை கூடுதலாக 18,117 வாக்குகள் பெற்றுள்ளார். கருணாநிதியின் வெற்றியை திருவாரூரில் உள்ள திமுக தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் கொடுத்தும் கொண்டாடி வருகின்றனர்.

0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.