மழை பாதித்த பகுதிகளில் வாக்குப்பதிவு நேரம் நீடிப்பு குறித்து மாலை 3 மணிக்கு பின்னர் முடிவு செய்யப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராஜேஷ் லக்கானி, தமிழகத்தில் மதியம் 1 மணி வரை 42.1 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், மழையால் மின்தடை ஏற்பட்டுள்ள வாக்குச் சாவடிகளில் அவசர விளக்குகள் மூலம் வாக்குப் பதிவு நடைபெற்றுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேபோல, மாலை 6 மணிக்கு முன்னதாக வாக்குச் சாவடிக்கு யார் வந்தாலும், அவர்களுக்கு டோக்கன் தரப்பட்டு வாக்களிக்க அனுமஹ்டிக்கப்படும் என்றும் ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.