இந்திய தொழிலாளர்கள் பிரச்னைக்கு தீர்வு: கத்தார் நாட்டில் பிரதமர் உறுதி !

கத்தார் நாட்டில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
கத்தார் தலைநகர் doha -வில் இந்திய தொழிலாளர்கள் மத்தியில் பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். கத்தார் நாட்டு தலைவர் Sheikh Tamim bin Hamad Al-Thani – யிடம் இது குறித்து பேச உள்ளதாக இந்திய தொழிலாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
தொழிலாளர்களுடன் 30 நிமிடங்கள் பேசிய பிரதமர் பின்னர் அவர்களில் சிலருடன் கைகுலுக்கி நலம் விசாரித்தார். இதன் பின் தொழிலாளர்களுடன் அவர் உணவருந்தினார். கத்தார் நாட்டில் 6 லட்சத்து 30 ஆயிரம் இந்திய தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதற்கிடையில் கத்தார் நாட்டுடன் எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் உறவை வலுப்படுத்துவது குறித்து அந்நாட்டு தலைவர் Sheikh
Tamim bin Hamad Al-Thani – யுடன் பிரதமர் மோடி இன்று பேச உள்ளார். முன்னதாக தோஹா சென்றடைந்த மோடியை கத்தார் பிரதமர் விமான நிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்