கொள்ளையடிக்கத் திட்டமிட்டு வீடுகளில் வடமாநில கொள்ளையர் ரகசிய குறியீடு
விளக்கப் படத்துடன் போலீஸார் எச்சரிக்கை!
விளக்கப் படத்துடன் போலீஸார் எச்சரிக்கை!
தமிழகத்தில் வட மாநிலத்தவர்களின் வருகையும் ஆதிக்கமும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது.வட மாநிலத்தவர்கள் பலர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக பரவலான குற்றச்சாட்டு ஒன்று உள்ளது.
அந்த வகையில் சமீப காலமாக
கொள்ளையடிக்கப்போகும் வீட்டை நோட்டம் பார்த்து, சுவர் அல்லது கதவில் ரகசிய குறியீடுகளை எழுதும் பாணியை வடமாநில கொள்ளையர்கள் மேற்கொள்கின்றனர்.
இதுபோன்று ரகசிய குறியீட்டை காணும் பொதுமக்கள் காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வட மாநில கொள்ளையர்களின் கைவரிசை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக விசாரித்த காவல்துறையினருக்கு, வடமாநில கொள்ளையர்கள் சில நூதனமான வழிமுறைகளை கடைப்பிடிப்பது தெரியவந்துள்ளது.
கும்பலாகச் சென்று கொள்ளையடிப்பது, கொள்ளைச் சம்பவத்துக்கு முன் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகளை தனித்தனியாக சென்று நோட்டம் விடுவது ஆகிய செயல்களில் ஈடுபடுகின்றனர்.
மேலும், வீடு மற்றும் கடைகள் தொடர்பான தகவல்களை அறிந்து, அதற்கேற்ப சுவரிலும், கதவிலும் ரகசிய குறியீட்டை எழுதிச் செல்கின்றனர்.
அதன்படி, ஆங்கிலத்தில் ‘D’ என சுவரில் எழுதியிருந்தால் சம்பந்தப்பட்ட வீடு அல்லது, கடைக்குள் நுழைவது கடினம் மற்றும் ஆபத்தானது,
‘எம்’ போன்ற வடிவிலான குறியீடு எனில் சிசிடிவி கேமரா அல்லது அலாரம் இருக்கிறது,
சிறுவட்டங்கள் வரைந்திருந்தால் செழிப்பான வீடு,
முக்கோண வடிவில் வரைந்திருந்தால் பெண்கள் மட்டுமே உள்ள வீடு,
செவ்வக வடிவத்தினுள் குறுக்காக கோடுகள் இருந்தால் ஆளில்லாத வீடு,
பெரிய வட்டத்துக்குள் குறுக்காக கோடுகள் இருந்தால் அந்த வீட்டில் நகை, பணம் எதுவும் கிடைக்காது! என்பதை தெரிவிக்கும் வகையில் சுவரில் வரைகின்றனர்.
பிறகு இரவிலோ அல்லது ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்திலோ வந்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றுகின்றனர். எனவே
இதுபோன்று ரகசிய குறியீட்டை காணும் பொதுமக்கள் காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Follow Social Plugin