தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் 37 ஊராட்சி தலைவர், 16 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் 163 வாக்குச்சாவடிகளில் நடைபெற்றது.
வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்குச்சாவடிகளில் இருந்து நேற்று முன்தினம் இரவு வாக்கு எண்ணும் மையமான பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது.
அங்கு வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்ட 3 அறைகளுக்கு நேற்று காலை 7.30 மணி அளவில் வேட்பாளர்கள், கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் தேர்தல் அலுவலர் கோவிந்தராஜன் சீல் வைத்தார்.
வாக்குப்பெட்டிகள் உள்ள அறைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளை (வியாழக்கிழமை) வாக்கு எண்ணும்போது கூட்டத்தை கட்டுப்படுத்த சவுக்கு கம்புகளால் தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.


0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.