கொரோனா பரவல்.. தமிழகம் முழுக்க சுதந்திர தின கிராமசபைக் கூட்டம் ரத்து..

கொரோனா பரவல் காரணமாக சுதந்திர தின கிராமசபைக் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

மாநிலம் முழுவதும் சுதந்திர தின கிராமசபைக் கூட்டம் ரத்து செய்யப்படுகிறது. கொரோனா பரவல் உள்மாவட்டங்களில் அதிக உள்ள நிலையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.பொதுவாக குடியரசு தினம், சுதந்திர தினம் ஆகிய முக்கிய தினங்களில் கிராமசபை கூட்டம் நடக்கும்.

மே 1, அக்டோபர் 2 ஆகிய தேதிகளிலும் கிராமசபைக் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.கொரோனா தொற்று அதிக உள்ளதால் தமிழகத்தில் நாளை கிராமசபைக் கூட்டத்தை நடத்த தேவையில்லை என்று முதல்வர் பழனிசாமி மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்