பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக சிறைகளில் 10ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வரும் முஸ்லிம் சிறைவாசிகள் உட்பட அனைத்து வாழ்நாள் சிறைவாசிகள் மற்றும் 7 தமிழர்களையும் விடுதலை செய்யக் கோரி நாளை 8.9.2020 அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்கள், நகரங்கள், பேரூர்கள் மற்றும் சிற்றூர்களில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி புதுக்காேட்டை மேற்கு மாவட்டம்
மனிதநேய மக்கள் கட்சியியின் சார்பில் 10 ஆண்டுகளுக்கு மேலான வாழ்நாள் சிறைவாசிகள் மற்றும் 7 தமிழர்களை விடுதலை செய்யக் காேரி இன்று 8/9/2020 கறம்பக்குடியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 31 அன்று திண்டுக்கல்லில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், 10 ஆண்டுகளை நிறைவு செய்த அனைத்து வாழ்நாள் சிறைவாசிகளும், 60 வயதை கடந்த சிறைவாசிகளும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அறிவிப்பு செய்தார்.
அதனை தொடர்ந்து 1775 வாழ்நாள் சிறைவாசிகள் விடுதலை செய்ய ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரைத்தது. தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு குற்றவாளிகள் மூவர் உட்பட, தமிழக சிறைகளில் உள்ள ஆயுள் சிறைவாசிகள் 1460 பேர் ஆளுநர் ஒப்புதலுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால், இந்த விடுதலை நடவடிக்கையில் குறிப்பாக முஸ்லிம் சிறைவாசிகளுக்கு பல்வேறு அரசாணைகளை காரணம் காட்டி அவர்களின் விடுதலையை தமிழக அரசு நிராகரித்துள்ளது. இது அப்பட்டமான பாரப்டசமாகும்.
10 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்நாள் சிறைவாசம் அனுபவித்து வரும் முஸ்லிம் சிறைவாசிகள் மற்றும் 7 தமிழர்கள் உள்ளிட்ட தமிழக சிறையில் உள்ளிட்ட அனைத்து வாழ்நாள் சிறைவாசிகளையும் பாரபட்சமின்றி தமிழக அரசு அரசியலமைச் சட்டத்தின் உறுப்பு 161ஐ பயன்படுத்தி பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை (செப் 15) முன்னிட்டு விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.