“மனதை வருடும் குரல்” ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான் பாடிய பாடல் ! இணையத்தில் வைரல்

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான் பாடகியாக அறிமுகமாகியுள்ளார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் ,மகள் கதீஜா ரஹ்மான் இந்தியில் உருவாகி இருக்கும் ஃபரிஷ்தா என்ற பாடல் மூலம் பாடகியாகியுள்ளார். இந்த பாடலுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். அன்பின் முக்கியத்தை பதிவு செய்யும் விதமாக உருவாக்கப்பட்டிருக்கும் இப்பாடல், மத ஒற்றுமையின் அவசியத்தையும் வலியுறுத்துகிறது.

அனிமேஷன் வீடியோவுடன் இப்பாடல் வெளியாகி இருக்கிறது. அதில் , புர்கா அணிந்த சிறுமி கடவுளின் கருத்துக்களுடன் உலகம் முழுவதும் பயணிக்கிறார். தமிழிலும் வெளியாகியுள்ள இந்த பாடலானது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.




கருத்துரையிடுக

0 கருத்துகள்