தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டசபை தேர்தல் - தலைமைத் தேர்தல் ஆணையர்

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்று தலைமைத்தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று அமலுக்கு வந்துள்ளன. கன்னியாகுமரி லோக்சபா தொகுதி இடைத் தேர்தலும் அன்றைய தினம்தான் அறிவிக்கப்படுகிறது. டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று மாலை 4.30 மணிக்கு தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதி குறித்து அறிவிப்பு வெளியிட்டார். அப்போது, பிற தேர்தல் ஆணையர்களும் உடனிருந்தனர்.

தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறியதாவது: தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் உட்பட 5 மாநிலத்தில் தேர்தல் நடத்தைவிதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. தமிழக தேர்தல் பார்வையாளராக தேவேந்திர குமார் நியமனம் என்ற ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி நியமிக்கப்படுவார். தமிழக செலவீன பார்வையாளராக பாலகிருஷ்ணன் மற்றும் மது மாதன் நியமனம் செய்யப்படுவார்கள்.

தமிழகத்தில் 234 தொகுதிகள் உள்ள நிலையில், அதில் 44 தனித்தொகுதிகள் தனித் தொகுதிகள். 2 தொகுதிகள் பழங்குடியினருக்கானவை. தமிழகத்தில் 88 ஆயிரத்து 936 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்ட உள்ளன. கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது 34.6 3% கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்ட உள்ளன. ஒரு வாக்குச் சாவடியில் 1,000 வாக்காளர் மட்டுமே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும். தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஏப்ரல் 6ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும்.

* மார்ச் 12ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கும். 
* வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 19ம் தேதி. 
* வேட்புமனு பரிசீலனை மார்ச் 20ம் தேதி நடைபெறும். 
* வேட்புமனு வாபஸ் பெற மார்ச் 22ம் தேதி கடைசி நாளாகும்.

ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். 5 மாநிலங்களிலும், மே மாதம் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்., மே மாதம் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என சுனில் அரோரா தெரிவித்தார்.

-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







கருத்துரையிடுக

0 கருத்துகள்