ரூ.80 கோடி ரூபாய் மின்சார கட்டணத்தை பார்த்த பின்னர் ஏற்பட்ட அதிர்ச்சியில் முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் மகாராஷ்டிராவில் அரங்கேறி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நிர்மல் கிராமத்தில் அரிசி ஆலை நடத்தி வரும் கணபத் நாயக் என்ற நபரின் ஆலைக்கு சூ. 80 கோடி மின் கட்டணம் வந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவருக்கு ஏற்பட்ட உயர் ரத்த அழுத்தத்தால் அவரின் உடல்நிலை மோசமாகி உள்ளது.. உடனடியாக அவரை பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதுகுறித்து பேசிய அவரின் பேரன் நிராஜ் முதலில் அவர்கள் எங்களுக்கு ஒட்டுமொத்த மாவட்டத்தின் பில்லை அனுப்பியதாக நினைத்தேன். நாங்கள் மறுபரிசீலனை செய்தோம், அது எங்கள் பில் மட்டுமே. லாக்டவுனின் போது நிலுவையில் இருந்த, நிலுவைத் தொகையை மின்வாரியம் வசூலிக்கத் தொடங்கியுள்ளதால் நாங்கள் பயந்தோம்.
இருப்பினும் பின்னர் எங்கள் பில்லில் குறிப்பிடப்பட்டுள்ள மிக உயர்ந்த தொகை மகாராஷ்டிரா மாநில மின்சார விநியோக நிறுவனம் லிமிடெட் (எம்.எஸ்.இ.டி.சி.எல்) ஒரு எழுத்தர் பிழையின் விளைவாக இருந்தது தெரியவந்தது. இந்த பில்லை திருத்தி அனுப்பவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது” என்று தெரிவித்தார்.
மேலும் இது குறித்து விளக்கமளித்த மகாராஷ்ட்டிரா மின்சார வாரிய அதிகாரி சுரேந்திர மோனெரே கூறுகையில், “ மின் வாரியம் 6 இலக்கங்களுக்கு பதிலாக 9 இலக்கங்களின் பில்லை உருவாக்கியுள்ளது. நாங்கள் அந்த பில்லை திருத்தி புதிய பில்லை வழங்கியுள்ளோம். அவர்கள் இப்போது திருப்தி அடைந்துள்ளனர். ” என்று தெரிவித்தார்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.