நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவாக பேசிய கல்யாணராமனை கண்டித்து அதிரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவாக பேசி, மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய கல்யாணராமனை கண்டித்தும், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் அதிரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதிரை அனைத்து முஹல்லா மற்றும் இயக்கங்களின் கூட்டமைப்பினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அதிரை பேருந்து நிலையத்தில் இன்று அஸர் தொழுகை முதல் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த கண்டன ஆர்பாட்டத்தில் பெண்கள், பொதுமக்கள், இளைஞர்கள் என பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு கல்யாணராமனை கண்டித்து  அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பினர். 

இறுதியாக கல்யாணராமன் மீது புகார் கொடுக்கும் விதமாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அதிரை காவல் நிலையத்தில் புகார் மனுக்களை வழங்கினர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவாக பேசி, மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என புகார் மனுவில் தெரிவித்தனர் இந்த புகார் மனு சுமார் 500 மனுக்கள் காவல் துறையிடம் வழங்கப்படலாம் என ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்