மேற்கு வங்க மாநில பாஜக இளைஞரணி செயலாளர் பமீலா கோஸ்வாமி. இவர் தனது நண்பர் பிரமிர் குமாருடன் சேர்ந்து கொண்டு அடிக்கடி கஃபே ஒன்றிற்கு சென்று வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு காரில் இருந்த படியே மோட்டார் சைக்கிளில் வரும் சிலரிடம் போதைப் பொருட்களை பரிமாற்றம் செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில் கொல்கத்தாவில் உள்ள என்.ஆர்.அவென்யூவில் உள்ள கஃபேவிற்கு மாநில பாஜக யுவ மோர்ச்சா பொதுச் செயலாளர் பமீலா கோஸ்வாமி நேற்று மாலை காரில் சென்று கொண்டிருந்தார். பமீலா உடன் நண்பரும், யுவ மோர்ச்சா நிர்வாகியுமான பிரமிர் குமார் மற்றும் பமீலாவின் தனிப்பட்ட பாதுகாவலர் ஆகியோர் உடன் சென்றனர். அவர்களை மறித்த காவல்துறையினர் காரை சோதனை செய்தனர். அப்போது பமீலாவின் கைப்பை மற்றும் கார் சீட்டிற்கு அடியில் கோக்கைன் என்ற போதைப்பொருள் இருந்தது.
இதையடுத்து காவல்துறையினர் பாஜக இளைஞரணி செயலாளர் பமீலா கோஸ்வாமி மற்றும் அவரது நண்பர் பிரமிர் குமாரையும் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவரிடமும் அவர்களுடன் வேறு யார் ஈடுபட்டுள்ளனர்..? அவர்கள் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் ஒரு பகுதியா..? என்ற கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.