நடிகர் விவேக் காலமானர்…அவருக்கு வயது 59

மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் சிகிச்சை பலனின்றி காலமாகியுள்ளார். அவருக்கு வயது 59.

நடிகர் விவேக்கிற்கு நேற்று மூச்சுத் திணறல் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் எக்மோ கருவியின் துணையுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதையடுத்து தமிழ் திரையுலகம் சோகத்தில் ஆழ்ந்தது. விவேக் விரைவில் நலம் பெற வேண்டுமென பலர் பிரார்த்தனை செய்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை 4.35 மணிக்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒட்டு மொத்த தமிழகமும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

காமெடி மூலமும் நல்ல கருத்துக்களை மக்களிடம் எடுத்துச் சொன்ன ஒரு நல்ல சிந்தனை கொண்ட கலைஞன் இனி இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று பலர் தெரிவித்து வருகின்றனர். விவேக் நேற்று முன்தினம் தான் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் தான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதா என்ற கேள்வியும் எழுந்தது. நேற்று மருத்துவமனையில் விவேக்கை பார்க்கச் சென்ற மன்சூர் அலி கானும் தடுப்பூசியால் தான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்று கூறியது சர்ச்சை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்