நிறைவடைந்தது தமிழக சட்டமன்ற தேர்தல்…!

தமிழகத்தில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவானது, 12  நேரத்திற்கு பின்  நிறைவடைந்துள்ளது. பெரும்பாலான வாக்குச்சாவடியில், பிரபலங்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 6 மணிக்கு மேல் கொரோனா நோயாளிகள் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. வாக்குப்பதிவு நேரம் முடிந்தாலும், வாக்குச்சாவடியில் வந்து காத்திருப்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அவர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படும் தமிழகம் முழுவதும் மாலை 5 மணி நிலவரப்படி 63.60% வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்த வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட உள்ளன. பதிவான வாக்குகள் மே 2 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்