டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி வாய்ப்பு யாருக்கு? சமூக வலைத்தளங்களில் பரவும் மீம்ஸ்


ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகிறது.

இந்த உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி சுற்றுக்கு யார் முன்னேறுவார் என்ற மிக முக்கியமான போட்டியாக இது பார்க்கப்படுகிறது. குரூப் 'பி'யை பொறுத்தவரை பாகிஸ்தான் அணி ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறிவிட்டது. மீதமுள்ள ஒரு இடத்திற்கு இந்தியா, நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான் அணிகள் போட்டி போட்டு வருகின்றன. இன்று நடைபெறும் போட்டியில் ஒருவேளை நியூசிலாந்து அணி வெற்றிபெற்றால் அரையிறுதிக்கு முன்னேறிவிடும். மாறாக ஆப்கானிஸ்தான் அணி வெற்றிபெற்றுவிட்டால் ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு செல்லும் அணி தேர்வு செய்யப்படும். அந்தவகையில் இந்திய அணி அடுத்ததாக நமீபியாவை வீழ்த்திவிட்டால், இந்தியா அரையிறுதிக்கு சென்றுவிடும். இதனால், இன்று நடைபெறும் போட்டி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அரையிறுதி வாய்ப்பு யாருக்கு ?? ஆப்கானிஸ்தான் அணி வெற்றிபெற்று விடுமா என்ற மீம்ஸ் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்