புதிய அச்சுறுத்தலாக இருக்கும் ஓமைக்ரான் வைரஸின் அறிகுறிகள் ?

தென் ஆப்பிரிக்காவில் தான் நவ., 24ம் தேதி முதல்முறையாக ‛ஓமைக்ரான்' வகை வைரஸ் உலக சுகாதார அமைப்பால் கண்டறியப்பட்டது. அதன்பின் ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல், பிரிட்டன், நெதர்லாந்து ஆகிய 9 நாடுகளுக்கு ஒற்றை இலக்க அடிப்படையில் பரவிவிட்டது. நாடுகளிலும் இந்த வகை வைரஸ் கண்டறியப்பட்டது.

கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்திலிருந்து உலக நாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்உ வரும் சூழலில், புதிய அச்சுறுத்தலாக வந்திருக்கிறது ஓமைக்ரான். இந்த வைரஸ் வேகமாக பரவக்கூடியது என கூறப்படும் நிலையில், டெல்டா வைரஸை விட ஆபத்தானதா என்று ஆராய்ந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வகை கொரோனா வைரஸ், ஏற்கெனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களையும் எளிதில் தாக்கும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது. 


அதேபோல், பரவல் விகிதத்தில் ஓமைக்ரான் வைரஸ் உலக அளவில் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த வைரஸின் அச்சுறுத்தலால், உலக நாடுகள் தங்களது எல்லைகளை மூடி வருகின்றன. விமான சேவைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஜப்பானில் வெளிநாட்டுப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, விமான நிலையங்களில் வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது ஓமைக்ரான் வைரஸ் அறிகுறிகள் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது.

தென் ஆப்பிரிக்க மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் ஏஞ்சலிக் கோட்ஸி, ஒமிக்ரான் வைரஸ் புதிய அறிகுறிகளை உருவாக்குகிறது என்று கூறியிருக்கிறார். சோர்வு, லேசான தசைவலி, தொண்டை அரிப்பு, வறட்டு இருமல் மற்றும் லேசான காய்ச்சல் போன்றவை இதன் அறிகுறிகளாக சொல்லப்படுகிறது என்றார். மேலும், ஓமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு சில நாட்களில் குணமடைந்து விடுவார்கள் என்றும், தடுப்பூசி போடாத நோயாளிகளுக்குக் கூட அறிகுறிகள் தென்படுவதாகவும் கூறினார். அதேசமயம், டெல்டா வைரஸின் போது இருந்த வாசனை, சுவை தெரியாமல் போவது, ஆக்ஸிஜன் அளவு குறைவது போன்ற எந்த அறிகுறிகளும் இந்த வைரஸில் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.

-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







கருத்துரையிடுக

0 கருத்துகள்