பேராவூரணியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஆரம்ப இடையீட்டு சேவைகள் மையம் தொடக்கம்

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டார வள மையம் சார்பில், ஊராட்சி ஒன்றிய கிழக்கு தொடக்கப்பள்ளி வளாகத்தில், மாற்றுத்திறனாளி பள்ளிக் குழந்தைகளுக்கான மாவட்ட அளவிலான ஆரம்ப இடையீட்டு சேவைகள் மையம் துவக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, சேவை மையத்தை தொடங்கி வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி.சௌந்தரராஜன், தஞ்சாவூர் மருத்துவர் கிருத்திகா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர். 

இம்மையத்தில், மாற்றுத்திறன் கொண்ட பிறப்பிலிருந்து 5வயது வரையிலான குழந்தைகளுக்கான ரூபாய் 2 லட்சம் மதிப்புடைய கற்றல் பொருட்கள் உள்ளது. மேலும், இம்மையத்தில் இயன்முறை மருத்துவர்கள், சிறப்பாசிரியர்கள் உள்ளனர். மாதம் இருமுறை சிறப்பு மருத்துவர்கள் வருகை தருவர். இவர்கள் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பயிற்சி அளிப்பார். வளர்ச்சி தாமதம் உள்ள குழந்தைகள் தொடர் சிகிச்சையின் மூலம் முன்னேற்றம் அடையும் வகையில் இம்மையம் தொடங்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் பேராவூரணியில் இம்மையம் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

விழாவில், டாக்டர் வெங்கடேஷ், வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) முருகேசன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இ.திருமேனி சாந்தஷீலா, இயன்முறை மருத்துவர் யோகலட்சுமி, கல்விப்புல வலர்கள் சுப.சேகர், அ.அப்துல் மஜீது, ஆனந்தராஜ், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகரன், ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியர் பாலசந்தர் செய்திருந்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்