பட்டுக்கோட்டை நாடி மருத்துவமனை சார்பில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் செந்தலைவயல் ஊராட்சி ஏற்பாட்டில் சிறப்பு மழைக்கால மருத்துவ முகாம் செந்தலைவயல் ஊராட்சி சமுதாயக் கூடத்தில் இன்று புதன்கிழமை காலை 9 மணி முதல் 4 மணி வரை நடைபெற்றது.
ஊராட்சி மன்றத் தலைவர் M.ரகுமத்துல்லா மற்றும் முன்னால் ஊராட்சி மன்றத்தலைவர்கள், வாா்டு உறுப்பினர்கள் பங்கேற்றனா். முகாமை ஊராட்சி மன்றத்தலைவர் துவங்கிவைத்தார். இதில் பட்டுக்கோட்டை நாடி மருத்துவமனையிலிருந்து மருத்துவா் கமலி MBBS, மருத்துவா் பிரசாத் MBBS,
மருத்துவா் கார்த்திக் MBBS, மக்கள் தொடர்பு அதிகாரி P. சுந்தரேசன் ஆகியோர் மருத்துவ சேவையாற்றினர். முகாமில் மழைக்காலத்தில் ஏற்படுகிற நோய்களான தொண்டை வலி , காய்ச்சல் , சளி , இருமல் போன்ற வியாதிகளுக்கு சிகிச்சை மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டது. இந்த முகாமில் பொதுமக்கள் அதிக அளவு கலந்துக்கொண்டு பயன்பெற்றனர்.
பருவ மழையினால் ஏற்படும் நோய்களில் இருந்து காத்துக் கொள்ள பொதுமக்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்க அறிவுறுத்தப்பட்டது. மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் இன்று நடைபெற்ற சிறப்பு முகாமில் சுமார் 45 க்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசியும் செலுத்தப்பட்டது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.