மத்திய தொலைத்தொடர்புத் துறை கூறுகையில், உள்நாட்டு 5G சோதனை திட்டம் அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சோதனை டிசம்பர் 31, 2021க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் குருகிராம், பெங்களூரு, கொல்கத்தா, மும்பை, சண்டிகர், டெல்லி, ஜாம்நகர், அகமதாபாத், சென்னை, ஹைதராபாத், லக்னோ, புனே மற்றும் காந்திநகர் ஆகிய இடங்களில் 5ஜி சோதனை மையங்களை அமைத்துள்ளனர். இந்த நகரங்களில் 5ஜி சேவை நாட்டிலேயே முதலாவதாக வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இந்த பெருநகரங்கள் மற்றும் பெரிய நகரங்களில் 5G சேவைகள் முதலில் தொடங்கும்.
2002 மற்றும் 2014 க்கு இடையில் 62,386 கோடி ரூபாயாக இருந்த தொலைத்தொடர்பு துறையில் அன்னிய நேரடி முதலீடு 2014 மற்றும் 2021 க்கு இடையில் கிட்டத்தட்ட 150 சதவீதம் அதிகரித்து 1,55,353 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. தொலைத்தொடர்புத் துறையின் நிதியுதவியுடன் கூடிய 5ஜி சோதனைத் திட்டம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்புத் துறை 5G தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் சோதனைகளுக்காக புகழ்பெற்ற கல்லூரி நிறுவனங்களுடன் இணைந்துள்ளது. உள்நாட்டு 5ஜி சோதனை திட்டத்தில் நாட்டின் எட்டு கல்லூரிகள் ஈடுபட்டுள்ளன. அதில் ஐஐடி பாம்பே, ஐஐடி-டெல்லி, ஐஐடி-ஹைதராபாத், ஐஐடி-மெட்ராஸ், ஐஐடி-கான்பூர், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் பெங்களூர் (ஐஐஎஸ்சி), சொசைட்டி ஃபார் அப்ளைடு மைக்ரோவேவ் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் அண்ட் ரிசர்ச் மற்றும் சென்டர் ஃபார் எக்ஸலன்ஸ் வயர்லெஸ் தொழில்நுட்பம் (CEWiT) ஆகிய கல்லூரிகள் 36 மாதங்களாக சோதனை திட்டத்தில் உள்ளன.
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.